தமிழகம்
புயலுக்கு பின் மீண்டும் பணிக்கு திரும்பிய மீனவர்கள்..

தமிழ்நாட்டில் வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மோந்தா புயல் காரணமாக தஞ்சை மாவட்ட மீனவ கிராமங்களான மல்லிப்பட்டினம் போன்ற கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடந்த 9 தினங்களாக கடலுக்கு செல்லவில்லை தற்போது மோந்தா புயல் கரையை கடந்த பின் நேற்று நள்ளிரவு முதல் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.




