தமிழகம்
தஞ்சாவூரில் ட்ரோன் பறக்க தடை..

தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகள் தஞ்சாவூருக்கு வருகிறார். அதனை தொடர்ந்து 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.