தமிழகம்
கும்பகோணத்தில் இன்று கடைகள் அடைப்பு..

கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் கரூர் துயர சம்பவத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தமிழக முழுவதும் ஒரு நாள் கடையடைப்பு நடத்தப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்திருந்தது. அதன்படி கும்பகோணம் மாநகர பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டது.