தமிழகம்
தங்கம் விலை ரூ.720 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது..

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 10240க்கும் சவரன் ரூ.81920க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் சவரன் ரூ.82,000ஐ நெருங்கியது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ. 142க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந்தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அதிலும் கடந்த மாதம் 29-ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை இருந்தது. அந்த வகையில் கடந்த 4-ந்தேதி வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை தாண்டியது.