திருவாரூரில் ஈர உள்ளம் அமைப்பு சார்பில் ஷீலாஜேப்பியார் நினைவு அவசர ஊர்தி வழங்கும் விழா

ஈர உள்ளம் நிறுவனத்தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற விழாவில்
கல்வி உளவியலாளரும் , குழந்தைகள் உரிமைநிபுணருமான சரண்யாஜெயக்குமார் , திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியாசெந்தில்
ஆகியோர்
“அவசர ஊர்தியை” பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கிவைத்தனர் ,
திருவாரூர் ஏழை எளிய மக்களுக்காக சேவையை ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் வழங்கினார் ,
ஈர உள்ளம் அமைப்பினர் சமூகபணியாக 46 ஆதரவற்ற உடல்களை உரிய சடங்குடன் அடக்கம் செய்துள்ளனர் , மேலும் தூய்மை பணியாளர்களை பாராட்டி நலத்திட்டங்களை செய்து வருகின்றனர் ,
இந்நிகழ்வில் காங்கிரஸ் திருவாரூர் நகர தலைவர் விகேஎஸ். அருள் ,
நியமனக்குழு உறுப்பினர்
வாரைபிரகாஷ் , ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு தலைவர் கனகராஜன் , இந்திய மருத்துவக்கழகச்செயலாளர் ரவீந்திரபாபு , தமிழ்ச்சங்க துணைத் தலைவர் புலவர் சந்திரசேகரன். அரிமா சங்கம் நிர்வாக அலுவலர் ராஜ்குமார் , கும்பகோணம் ரோட்டரி சங்க தலைவர் பாஸ்கர் உட்பட சமூக ஆர்வலர்கள் , வர்த்தக சங்கங்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள்,ரோட்டரி சங்கங்கள் , மார்னிங் காபி கிளப் , லயன் சங்கங்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .