Uncategorized
மாற்றுத்திறனாளி அடையாள அட்டை சிறப்பு முகாம்..

தஞ்சையில் இதுவரை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூன் 10 அன்றும் கும்பகோணம் கே. எம். எஸ். எஸ். வளாகத்தில் ஜூன் 17, பட்டுக்கோட்டை வட்டாட்சியரகம் எதிரே உள்ள கிராம சேவை கட்டடத்தில் ஜூன் 24 ஆகிய தேதிகளில் இம்முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
