உலகம்
ஹெராயின் கடத்திய வழக்கில், மலேசிய தமிழருக்கு தூக்கு தண்டனை..

- மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி காத்தையா (39) என்பவர், 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு சுமார் 45 கிராம் ஹெராயின் கடத்திய வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
- 2015-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இவருக்கு, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 2025 செப்டம்பர் 25 அன்று சாங்கி சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- சிங்கப்பூரின் போதைப்பொருள் துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ், ஒருவர் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தினால், அவருக்குக் கட்டாயமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.