தமிழகம்
கார்காவயலில் மக்களுடன் முதல்வர் முகாம்..

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கார்க்காவயல் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் BVN தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துக்கொண்டு துவக்கி வைத்தார்.இதில் மின்வாரியம், வருவாய்துறை என 15 துறைகள் சார்பாக முகாம் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். மேலும் சுய கடன் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சிதலைவர் பிரியங்கா பங்கஜம்,பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, என்.அசோக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதேபோல் ஏனாதி ஊராட்சியிலும் மூன்றாவது கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.