ஏவுகணை தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேல்

இஸ்ரேலுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்து பேரழிவை ஏற்படுத்திய ஈரான்
ஈரானின் அனுசக்தி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது ஈரான் தேசத்தின் மிக உயர்ந்த தலைவர் காமினி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று ஈரானில் இருந்து ஏராளமான ஏவுகணைகள் இஸ்ரேலை பதம் பார்த்துள்ளது.

இஸ்ரேலின் தலைநகர் டெல்அவில் கடும் சேதத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இஸ்ரேல் போர் தாக்குதலில் சேதம் அடைந்தால் எப்போதும் வெளிவராத வீடியோக்கள் போட்டோக்கள் இந்த முறை அதிகமாக வெளிவந்துள்ளது. காரணம் இந்த தாக்குதலை உலகத்திற்கு வெளி கொண்டு வந்தவர்கள் இஸ்ரேலியர்கள் தான். நெதன்யாவின் மீது கொண்ட எதிர்ப்பே இதற்கு காரணம்.
இஸ்ரேல் மீது நேற்று ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து கூறும்போது…மலை போல் ஏவுகணைகள் டெல் அவில் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு ஈரான் தக்க பதிலடியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.