கேரவனின் CCTV காட்சிகளை கேட்ட நீதிபதி-தர ஒப்புக்கொண்ட தவெக தலைவர்.

கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் பரப்புரை வாகனத்தின் சிசிடிவி காட்சிகளை காவல் துறையிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டிருந்த நிலையில் அவற்றை கொடுக்க விஜய் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் நிகழ்ச்சியில் தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் உள்ளிட்டோரை அப்படியே விட்டுவிட்டு பொறுப்பற்ற முறையில் தலைவர் விஜய் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். கரூர் நிகழ்ச்சியின் தலைவர் விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை என நீதிபதி கடுமையாக விமர்சித்திருந்தார்.
நீதிபதி மேலும் கூறுகையில், நாமக்கல், கரூர் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்ற இடத்தின் அத்தனை சிசிடிவி காட்சிகளையும், குறிப்பாக விஜய் சென்ற பரப்புரை வாகனத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்த சிசிடிவி, பதிவுகளை சேகரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அது போல் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பேருந்தின் சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் சம்பவத்தில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.