சீமானுக்காக களமிறங்கிய தடா ரஹீம்

இறைத் தூதரே வந்து திமுகவுக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொன்னாலும்.. நீங்கள் இறைத் தூதரே இல்லைனு சொல்வாங்களே ஒழிய இஸ்லாமிய மக்கள் எங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது கடும் சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில் சீமானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இந்திய தேசிய லீக் கட்சியின் தடா ஜெ.அப்துல் குறிப்பாக இஸ்லாமியர்கள் குறித்த சீமானின் விமர்சனம் கடுமையாக எதிர்ப்பை பெற்றுள்ள நிலையில், இஸ்லாமியர்களும், பிற அரசியல் கட்சி தலைவர்களும் சீமானுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு முதன் முறையாக இஸ்லாமிய கட்சியின் தலைவர் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல இந்திய தேசிய லீக் கட்சியின் நிறுவனர் தலைவரான தடா ஜெ.அப்துல் ரஹீம் தான்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,”திமுக முஸ்லிம் அடிமைகளுக்கு எதற்காக கோபம் வருகிறது? இஸ்லாமிய ஐந்து கடைமைகளில் ஆறாவது கடமை திமுகவை ஆதரிப்பது என்று முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் அவர்கள் கூறும் போது வராத கோபம் இப்போ ஏன் வருகிறது. நபிகள் நாயகம் ஸல் அவர்களே உயிர் பெற்று வந்து திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க என்று கூறினாலும் நீங்க நபிகள் நாயகமே இல்லை என்று கூறி திமுகவுக்கு ஆதரிக்கிற கூட்டம் தான் இன்றைய முஸ்லீம்கள். இதை தான் எடுத்துக் காட்டாக கூறி உள்ளார் அண்ணன் சீமான் அவர்கள்.” என கூறியுள்ளார்.
