தமிழகம்
திருவாரூர் மாவட்ட பசுமை முதன்மையாளர்கள் விருது..

திருவாரூர் மாவட்டத்தில் முதன்மையாளர்கள் விருது வழங்கப்பட இருக்கிறது. இது சுற்றுசூழல் கல்வி,விழிப்புணர்வு பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம், விஞ்ஞான ஆய்வு, நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு & நீர் மேலாண்மை, காலநிலை மாற்றம், காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் மறுசுழற்சி, சுற்றுசூழல் மறுசீரமைப்பு, கடற்கரை பாதுகாப்பு & பிற சுற்றுசூழல் திட்டங்கள் குறித்த துறைகளில் சிறந்து விளங்கும் 100 பேருக்கு தலா 1,00,000 வழங்கப்படுகிறது. இதற்க்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15 கடைசி நாள் ஆகும். இவ்விருது பெற தகுதியானவர்கள் www.tnpcb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.