
வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹3000 அதிகரித்துள்ளது இதனால் வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு கிராம் ₹170 க்கும் பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,70000 க்கும் விற்பனை ஆகிறது. தங்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வெள்ளி விலை அதிகரித்து வரும் நிலையில் கடந்த எட்டு நாட்களில் மட்டும் ஒரு கிலோவுக்கு ₹10,000 அதிகரித்துள்ளது.