தமிழகம்
பட்டுக்கோட்டையில் விடுதியில் உணவருந்திய 28 மாணவிகளுக்கு வாந்தி- மயக்கம்..

பட்டுக்கோட்டை ஆதி திராவிடர் பள்ளி மாணவிகள் விடுதியில் இன்று காலை உணவருந்திய 28 மாணவிகளுக்கு திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு பள்ளியில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆசிரியர்கள் அவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிகளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவிகளுக்கு விடுதி உணவு காரணமாக ஒவ்வாமை ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.