தமிழகம்
சவரன் தங்கம் ரூ.80000 ஆக அதிகரிக்கும்: வியாபாரிகள்.

பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் நகை வியாபாரிகள் தரப்பு,ஆபரணத் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10000 ஆகவும் ஒரு சவரன் ரூ.80000 ஆகவும் உயரக்கூடும் என்று கூறியுள்ளனர்.அமெரிக்கா-சீனா கனடா நாடுகளிடையேயான வர்த்தக போரே இதற்க்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.