தமிழகம்
திருக்குறள் எழுதும் போட்டியில் சாதனை படைத்துள்ள பெண் ..

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு சியாம் ஆர்ட் & கிராப்ட் பெங்களூர் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் இணைந்து 1330 திருக்குறள் எழுதும் உலக சாதனை நிகழ்வு ஓசூரில் நடந்தது. இதில் கோட்டூர் அருகே உள்ள செருகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவபாரதி வினோத் கலந்து கொண்டு தொடர்ந்து 24 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்தார். இவருடன் சேர்த்து 69 பேர் வெற்றி பெற்றார்கள் வெற்றி பெற்றவர்களுக்கு ஓசூரில் நடந்த பரிசளிப்பு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது. விருதுகளை ஓசூர் மேயர் S. A.சத்யா வழங்கினார்கள்.
