தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2200 உயர்வு.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,025-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் தங்கம் புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 375 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



