நெட் ஒர்க்கர்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பாக திருச்சியில் மாபெரும் விளக்க கூட்டம்..

நெட் ஒர்க்கர்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பாக திருச்சியில் மாபெரும் விளக்க கூட்டம்..திருச்சியில் 8-ந் தேதி நடைபெற உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு நமது ஓட்டு ?
நெட் ஒர்க்கர்ஸ் வெல்பேர் அசோசியேசன்
தலைவர் எம். மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியதாவது..
தங்களது கோரிக்கைகளை ஏற்பவர்களுக்கு வாக்களிப்பது என
தீர்மானிக்கப்பட்டது. மேலும் மோசடி நிதி நிறுவனங்களிடம் ஏமாந்து நிற்கும்
அப்பாவி மக்கள் இழந்த பணத்தை திரும்பப் பெறவும், போலி நிதி
நிறுவனங்களை ஒழிக்கவும், தொழிலிக்கு பாதுகாப்பு ஏற்படும் வகையிலும்,
ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் ஆணையம் அமைத்து, உரிய
நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி கூறி, தேர்தல் அறிக்கையில் வெளியிடும்
கட்சிக்கு அசோசியேசன் ஆதரவு அளிக்கும். நேரடி விற்பனை என்கிற நமது
தொழிலுக்கு கேரள அரசு அங்கீகாரமும், பாதுகாப்பும் வழங்கி ஆணை
பிறப்பித்துள்ளது. கேரள அரசு இயற்றிய சட்டத்தை போல தமிழகத்திலும்
சட்டத்தை இயற்றுவோம் என்று கூறுகின்ற அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பது
என்றும், நேரடி விற்பனை என்கின்ற எம்.எல்.எம். இண்டஸ்ட்ரியை
அங்கீகரிக்கவும், தனி சட்டம் இயற்றவும், தனி அமைச்சகம் ஏற்படுத்தவும், தனி
வாரியம் அமைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கவும், சட்ட பாதுகாப்பு
வழங்கவும் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து
வருகிறோம்.
மத்திய மாநில அரசுகளின் அனைத்து அங்கீகாரங்களையும் பெற்று, டி.டி.எஸ் –
ஜி.எஸ்.டி. போன்ற வரிகளை செலுத்தி வருகின்ற நேரடி விற்பனை என்கிற
எம்.எல். எம். தொழில் செய்து வருகின்ற நிறுவனங்கள் மூலம் இந்தியா
முழுவதும் சுமார் 5 கோடி பேர் முழு நேரமும், சுமார் 12 கோடி பேர் பகுதி நேரமும்
வேலை வாய்ப்பு பெற்று உள்ளார்கள்.
பல லட்சம் இளைஞர்கள் முகவர்களாக பணியாற்றி வருகிறார்கள். நேரடி
விற்பனை என்கிற எம்.எல்.எம். தொழிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில்
போலி இணைய தளங்களையும், போலி செயலிகளையும், தொடங்கி உள்ள
போலி நிதி நிறுவனங்களை நம்பி பல கோடி மக்கள் ஏமாந்து இருக்கிறார்கள்.
இதனால் நேர்மையான கம்பெனிகளுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. போலி
நிதி நிறுவனங்களிடம் ஏமாந்த மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும்,
இனியும் மக்கள் ஏமாறாமல் இருப்பதற்காகவும் 16 ஆண்டுகளாக
செய்தித்தாள்கள் மூலமும், தொலைக்காட்சி செய்திகள் மூலமும்,
லட்சக்கணக்கில் நோட்டீஸ்கள் அச்சடித்து விநியோகித்தும், ஆர்ப்பாட்டங்கள்,
உண்ணாவிரதங்கள், போன்ற போராட்டங்கள் மூலமாக விழிப்புணர்வை
ஏற்படுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கும், உயரதிகாரிகளுக்கும் மனுக்கள்
கொடுத்தும் தொடர்ந்து சேவை நோக்கத்தோடு போராடி வருகிறோம். நமது
கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு நமது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல்
அளித்து வெற்றி பெற செய்வோம் என தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடிப்படையாக முதன் முறையாக கோவையில் தலைவர் மற்றும் நிறுவனர் உயர்திரு மனோகரன் தலைமையில் துணை தலைவர்கள் திரு தமிழ்செல்வம் மற்றும் திரு ரூபன் முன்னிலையில் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 38 மாவட்ட தலைநகரங்களில் ஆலோசனை கூட்டம் பெறும் ஆதரவுடன் நடைபெற்றது இறுதியாக 28.10.2025 அன்று காரைக்காலில் துணைதலைவர் தமிழ்செல்வம் தலைமையில் மேல்மட்ட குழு உறுப்பினர்கள் பாலமுருகன் பழனி வாசுதேவன் கிருபாகரன் மாறன் வெங்கடேசன் ரமேஷ் கவிதாசெந்தில்குமரன் அனந்திகலியமூர்த்தி அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது இதனை தொடர்ந்து
திருச்சியில் வருகின்ற சனிக்கிழமை 08.11.2025 அன்று நடைபெற உள்ள மூன்று அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மனோகரன் தலைவர் மற்றும் நிறுவனர் அவர்கள் சிறப்புறை வழங்க
உள்ளார்கள்.
வரவேற்புரை உயர்மட்ட குழு உறுப்பினர் திரு ராஜசேகர்.
தலைமை துணைத்தலைவர் திரு. பிரபாகரன்
முன்னிலை துணைத்தலைவர்கள் திரு.தமிழ்செல்வம் திரு .ரூபன் , திரு ராமச்சந்திரன், திரு பாலமுருகன் திருமதி விக்டோரியா திரு.பழனி திரு.வாசுதேவன் திரு.கிருபாகரன், கோவை கேப்டன் பிரபாகரன், கருத்து கந்தசாமி திருவரம்பூர் முத்தமிழ, கிருஷ்ணா ஜி, ஆனந்தன்,மாறன், வெங்கட், வேதாரண்யம் ராஜேந்திரன், முனைவர் க. முத்துசாமி (எ) முத்துசூர்யா மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஒப்புதலுடன்
மூன்று அம்ச கோரிக்கைகள் குறித்து மாநாட்டில் விளக்க உரை ஆற்ற உள்ளார்கள். உயர்மட்ட குழு உறுப்பினர் திரு செல்வகுமார் நன்றியுரை ஆற்ற உள்ளார்கள்.




