இந்தியாவிளையாட்டு
உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசு..

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்த இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வழங்கும் பரிசுத்தொகையை விட அதிக தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் 50 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணியின் வீராங்கனைகள்,பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.51 கோடி பரிசுத் தொகையை அறிவித்தது பிசிசிஐ. சாம்பியனான இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2024 டி20 உலக கோப்பை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



