தமிழகம்
நெல் மணிகள் சேதம் அடைந்தது குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்…

விவசாயிகளின் நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனைய விட்டு வீணாக்கிய திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி என விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூரில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு அரசியல் ரீதியாக எவ்வித அறிக்கை, அறிவிப்புகளையும் வெளியிடாமல் இருந்த அவர் நேற்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய நிலையில் மீண்டும் அரசியல் பணிகளை தொடங்கியுள்ளார்.





