தமிழகம்
குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசாணை..

வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை.
ஊர்கள் தெருக்கள் குளங்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதி பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதன்படி ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன்குடியிருப்பு, வண்ணான் குளம், பறையர் தெரு, சக்கிலியர் சாலை உள்ளிட்ட பெயர்களை நீக்க உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகளை நவம்பர் 19ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது.
