தமிழகம்
கரூர் துயரம்: கைது செய்ய விரைகிறது போலீஸ்..

கரூர் துயர சம்பவத்தில் ஆனந்த், நிர்மல் குமார் உச்சநீதிமன்றத்தில் மூன்ஜாமின் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், ஜாமின் மனு விரைவில் விசாரணைக்கு வரவிருப்பதால் இருவரையும் இன்று இரவு அல்லது நாளைக்குள் கைது செய்ய தனிப்படை தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.