பட்டுக்கோட்டைக்கு புதிய வட்டாட்சியர்..

பட்டுக்கோட்டை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த சுகுமார் பேராவூரணிக்கு நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு தனி வட்டாட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து பட்டுக்கோட்டைக்கு புதிய வட்டாட்சியராக தர்மேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரத்தநாடு சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்த தர்மேந்திரா ஏற்கனவே பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை உதவியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்குபூர்வ சிந்தனைகளையும் அடித்தட்டு விளிம்பு நிலை மக்களின் உணர்வுகளையும் உணர்ந்து மிகச் சிறப்பாக சேவையாற்றுபவர். இதுனால் வரை தான் பணிபுரிந்த அனைத்து துறைகளிலும் மிகச் சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளின் பேரன்பை பெற்றவர்.
வரும் திங்கட்கிழமை பட்டுக்கோட்டை வட்டாட்சியராக பொறுப்பேற்கும் மதிப்பிற்குரிய தர்மேந்திரா அவர்களுக்கு நாளை நமதே இதழின் சார்பிலும் பட்டுக்கோட்டை அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பிலும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.