தமிழகம்
தஞ்சையில் 800 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ராஜப்பா பூங்கா அருகே காவல் உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ராஜாராம் திறந்து வைத்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் இந்த மையம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாநகரில் அனைத்து பகுதிகளிலும் 800 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.




