தமிழகம்
ரஜினி வீட்டில் குவிந்த போலீஸ்..

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்ட விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு ஈமெயில் வந்த நிலையில் அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். எனினும் ரஜினிகாந்தின் வேண்டுகோளை ஏற்று போலீசார் அங்கு சோதனை நடத்தவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பாக, இதேபோல அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.




