தமிழகம்
விடுமுறை கிடையாது…அரசு புதிய அறிவிப்பு

அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றும், வரும் அக்டோபர் 3 ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்ததாக நேற்று தகவல் வெளியானது. இந்த தகவல் உண்மையல்ல என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு பிரிவு (TN FACT CHECK) அறிவித்துள்ளது. இதனால் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும், ஊருக்கு சென்றுவரலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே. எனினும், அக்டோபர் 3-ம் தேதி விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும் என பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.