இந்தியா
உத்தரகாண்டில் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர்.. குழந்தை உட்பட 5 பேர் பலி

உத்தரகாண்டில் டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுண்ட் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த ஹெலிகாப்டர் அதிகாலையில் புறப்பட்ட நிலையில், குழந்தை உட்பட 6 பேர் பயணித்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் கவுரிகுண்ட் வனப்பகுதி அருகில் சென்றிருந்த போது, திடீரென மாயமாகி இருக்கிறது. இதனை அறிந்து தேடிய நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 6 பேர் பயணித்த நிலையில், 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.