அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது…

எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணத்தை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023 ஜனவரி 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.

இதனிடையே உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 14ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனால், மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணத்தை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தொகுதி காலியாகும் பட்சத்தில் 6 மாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால், அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button