தமிழகம்
ஒரே நாளில் பெறப்பட்ட 285 மனுக்கள்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 285 மனுக்கள் அளிக்கப்பட்டன. ஊராட்சி அலகு சார்பில் ஆனந்த ராமன் என்பவருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளராக பணி நியமன ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.