ஜனவரி 4 ஆம் தேதி பட்டுக்கோட்டைக்கு வரும் மணத்தி கணேசன்..

வருடம் தோறும் பட்டுக்கோட்டையில் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் தலைவர் பட்டுக்கோட்டை யஹ்யா அவர்கள் “நாளை நமதே” எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள்.
வரும் ஜனவரி 4-ஆம் தேதி பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் அருகில் உள்ள K.K.T சுமங்கலி மஹாலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சமூக இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் திரை படைப்பான “பைசன்” திரைப்படத்தின் மூலக்கதையின் நாயகன் மணத்தி கணேசன் பங்கேற்க இருக்கிறார்.
மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை கொடுக்க வரும் மணத்தி கணேசன் வருகையை பட்டுக்கோட்டை மக்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.




