தமிழகம்
கரூர் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் இதுதான்..

வேலுச்சாமி புரத்தில் கூட்டம் நடந்த தவெக அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.ஆனால் செய்தியாளர் சந்திப்பு மட்டும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சித் தலைவர் கரூர் வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார்.இதனால் மக்கள் காலை முதலே வரத் தொடங்கிவிட்டனர்.
27.09. 25 அன்று கட்சியின் தலைவர் சென்னையில் இருந்து காலை 8. 40 மணிக்கு புறப்பட்டு 9.25 மணிக்கு திருச்சி சென்றடைந்தார்.
நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார்.
அறிவிக்கப்பட்ட 12 மணி கடந்த ஏழு மணி நேரம் கழித்து தான் தாமதமாக வந்தார்.
இந்த காலதாமதம் கூட்டநெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளக்கம் தெரிவித்தார்.



