தமிழகம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி..

சாரதா என்ற பெண் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது மகன் ஆதித்யாவிற்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு உதவி செய்ய வேண்டும் என பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் விரக்தி அடைந்து தீக்குளிக்க முயன்றதாக கூறினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.