தமிழகம்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்குப்பிடி..

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை பயன்படுத்தாத ஆசிரியர்களை கண்காணிக்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 20000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.பெரும்பாலான ஆசிரியர்கள் அவற்றை காட்சிபொருளாகவே வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.இதனால்,அதிருப்தியடைந்த அதிகாரிகள் ஸ்மார்ட் வகுப்பறைகளில் பாடம் நடத்துவதை போட்டோ எடுத்து கல்வி அதிகாரிகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
