தமிழகம்
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.800 அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அதிரடியாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.2400 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.800 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீண்டும் ரூ.95ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




