கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி..

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவி ஒருவர் கல்லூரியில் உள்ள கழிவறையில் குழந்தை பெற்றெடுத்ததோடு அதனை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியின் பிரசவம் குறித்து அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் 20 வயது மதிக்கத்தக்க மாணவி திருமணமாகாத நிலையில் கர்ப்பமடைந்துள்ளார். கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்து youtube பார்த்து தொப்புள்கொடி அறுத்து யாருக்கும் தெரியாமல் குப்பைத்தொட்டியில் போட்டு மூடிவிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளார். இரத்தப்போக்கு அதிகமானதால் இச்சம்பம் வெளியாகி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கியவர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
