தமிழகம்
தஞ்சை ஆட்சியர் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதுக்கு தேர்வு..

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிபவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பெற்று தந்ததற்காகவும் அவர்களுடைய நலனுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காகவும் 2025 ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.