தமிழகம்
முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்..

சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமனங்கள் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.




