தமிழகம்
தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்..

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செப்டம்பர் 9 ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.