இந்தியா
இந்தியாவை உலுக்கிய 5 விமான விபத்துகள்!

- நவம்பர் 12, 1996 – ஹரியானாவின் சார்கி தாத்ரி பகுதியில் செளதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் கசகஸ்தான் விமானத்துடன் நடுவானில் மோதியது.
- இதில் இரு விமானங்களில் பயணித்த மொத்தம் 349 பேரும் உயிரிழந்தனர்.
- வரலாற்றில் மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இது மாறியது.
- ஜனவரி 01, 1978 – மும்பையில் இருந்து துபாய்க்கு பயணித்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறால் கடலில் விழுந்து நொறுங்கியது. பயணித்த 213 பேரும் உயிரிழந்தனர்.
- அக்டோபர் 19, 1988 – மும்பையில் இருந்து அகமதாபாத் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
- இதில் பயணித்த 135 பேரில் 133 பேர் உயிரிழந்தனர்.
- மே 22, 2010 – துபாயில் இருந்து மங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளானது.
- விமானத்தில் பயணித்த 166 பேரில் 158 பேர் உயிரிழந்தனர்.
- அக்டோபர் 12, 1976 – மும்பையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
- இதில் பயணித்த 95 பேரும் உயிரிழந்தனர்.