தமிழகம்
பண்ணவயல் அருகே பொதுமக்கள் கோரிக்கை: அரசு கண்டுகொள்ளுமா?

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பண்ணவயல் ஊராட்சியில் உள்ள கூத்தாடி வயல் கிராமத்தில் 100 – க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் செல்லக்கூடிய சாலையில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக இருக்கிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




