தமிழகம்
மும்மொழி கொள்கை.. மத்திய அரசு நிர்பந்தம்..

மும்மொழிக்கொள்கையை ஏற்றால் அரை மணி நேரத்தில் நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.பள்ளிக்கல்வி துறைக்கு நிதி ஒதுக்குவது குறித்து மத்திய அரசு நிர்பந்தம் செய்வதாக சாடிய அவர்,அறிஞர் அண்ணா காலத்திலிருந்தே இரு மொழி கொள்கை நாம் கொண்டுவந்ததிலேயே இருக்கிறது.நம் மாணவர்கள் அந்திய அளவில் கூட சாதனை புரிந்து வருகின்றனர் என்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிவிட்டால் தங்கள் மாணவர்களுக்கு தேவையான அறிவுசார் பயிற்சியை நாங்களே முடிவு செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
