நான் உயிரோடு இருக்கும் வரை நடக்காது:சீமான்

எண்ணூர் அனல்மின் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து சீமான் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். சென்னையை அடுத்து எண்ணூரில் உள்ள அனல்மின் நிலையத்தை எதிர்த்து வடசென்னை மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் அரசு எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் வேகப்படுத்தி வருகிறது. இன்று இந்த விரிவாக்கத் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் சீமான் பங்கேற்றுப் பேசினார். பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அவர் பேசினார்.அப்போது அவர்,”அனல், புனல், அணு, நிலக்கரி என இப்படி எல்லா மின் உற்பத்தி திட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கானது என்றும் வேலை வாய்ப்புக்கானது என்று சொல்லியே கொண்டுவந்துள்ளார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டும் போது இனிப்பாக இருக்கிறது. மின்சாரம் இல்லாமல் எப்படி நாடு வளரும் என்கிறார்கள். மின்சாரம் தயாரிக்க இந்த அனல்மின் திட்டம், அணுமின் திட்டம்தான் இருக்கிறது. அதைவிட்டால் வேறு வழியே கிடையாது எனச் சொல்வதை நாங்கள் மறுக்கிறோம்.தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர்,கடலையும்,காற்றையும் விசமாக மாற்றுவதுதான் வளர்ச்சியா எனக் கேள்விஎழுப்பினார்.மேலும்,தனது உயிர் இருக்கும் வரை இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டேன் எனக்கூறினார்.
