தமிழகம்
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் இனி பணி நீக்கம்.

தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் வகையில் விதிகளை திருத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் மீதான பாலியல் தாக்குதல்களை முற்றிலும் தடுக்கவும் புகாரில் சிக்கியவர்கள் சில நாட்கள் சஸ்பெண்ட் ஆகி ஜாமீன் பெற்று வெளியே வந்து விடுவதால் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.