தமிழகம்
கும்பகோணம் அரசு கல்லூரியில் நாளை இரண்டாம் கட்ட கலந்தாய்வு..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புக்கான மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை( ஜூன்20) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஏற்கனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும் புதியதாக விண்ணப்பித்தவர்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் அ.மாதவி தெரிவித்துள்ளார்.