அரசியல்
நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கு மண்டை உடைப்பு..

வளாகத்தில் பாஜக எம்பிக்கள், இந்தியா கூட்டணி எம்பிக்கள் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்பி தலையில் காயம் ஏற்பட்டது. அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய அமித்ஷா பதவி விலக கோரி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியும் அம்பேத்கரை வைத்து அரசியல் லாபம் காண முயல்வதாக கூறி பாஜக எம்பிகளும் நடத்திய போராட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. அத்துடன் படுகாயம் ஏற்பட்டதாக கூறி பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி, வீல்சேரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.
