ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு..

குடியரசு தினத்தை ஒட்டி, நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ் பவனில் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு. காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசு சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் 76 வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
ஆளுநர் சார்பில், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறும்.இதையொட்டி, ஆளுநர் மாளிகையில் மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மீதான அதிருப்தியின் காரணமாக, கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
