தமிழகம்
தமிழகத்தில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு …

தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்த அவர், கல்வியும், மருத்துவமும் நமது இரு கண்கள் என புகழாரம் சூட்டினார். மேலும்,இந்த மருந்தகங்கள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்குரிய மருந்துகள் 7.5% குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் கூறினார்.