தஞ்சை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை , 2 பேர் கைது ..

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 16 வயது சிறுமி கீழத்தோட்டம் கிராமத்தில் உள்ள தனது தோழியை சந்திக்க போயிருக்கிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 20 வயதாகும் அரவிந்த்(வயது 20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் அந்த பெண்ணிடம் பேசிய அரவிந்த், தனிமையில் சந்திக்க சிறுமியை அழைத்தாராம். அதை நம்பி அரவிந்தை சந்திப்பதற்காக ராஜாமடம் சவுக்கு தோப்பு பகுதிக்கு சிறுமி தனியாக சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியிடம் அத்துமீறியதுடன், அரவிந்த் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் மட்டுமல்லாது அவருடன் வந்த அரவிந்தின் நண்பனும், கீழத்தோட்டம் பகுதியை சேர்ந்த 20 வயதாகும் சரண் என்பவரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கதறி அழுத நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்திருக்கிறார்கள். பொதுமக்கள் வருவதை பார்த்தவுடன் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், தப்பியோடிய அரவிந்த் மற்றும் சரண் ஆகியோரை இருவரையும் பிடித்தார்கள். பிடிபட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
