தமிழகம்
தஞ்சையில் விபத்தில் சிக்கிய பி.ஆர். பாண்டியன் மகன்..

தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி. ஆர் பாண்டியன் மகன் ராம்திலக் திருமலைசமுத்திரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று கல்லூரி முடிந்து மன்னார்குடி திரும்பும் போது காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது பிளாஸ்டிக் சாலை தடுப்பு காற்றில் பறந்து வந்து கார் மீது விழுந்தது. இதனால் ராம் திலகின் கார் நிலை தடுமாறி சாலையின் சென்டர் மீடியினில் மோதி விபத்துக்குள்ளானது.