தமிழகம்

தமிழக அரசின் ஓய்வு ஊதிய திட்டம் அறிவிப்புக்கு ஜாக்டோ-ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு..

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிக்கும் வகையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 8ம் தேதி நன்றி அறிவிப்பு மாநாட்டை ஜாக்டோ-ஜியோ நடத்துகிறது.

இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதை கொண்டாடியும் வருகின்றனர். இந்த மகிழ்ச்சி எங்களுக்கு மட்டும் மகிழ்ச்சி அளிக்கவில்லை, அரசுக்கும் மகிழ்ச்சிதான். ஏனென்றால், ஓய்வு ஊதிய திட்ட அறிவிப்பு என்பது இந்த அரசு கிடைத்துள்ள வரலாற்று அறிவிப்பாக அமைந்து, வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது என்பதுதான்.இந்த திட்டம் சிறப்பான திட்டம் என்பதை மறந்துவிடக்கூடாது. ஏற்கனவே ஓய்வு பெற்று பணம் பெற்றவர்கள் கூட, சூப்பர் ஆனுவேஷன் பெற்றவர்கள் திரும்ப இந்த திட்டத்தில் சேர விரும்புவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. தமிழகத்தில் இப்போது முதல்வர் அறிவித்துள்ள பென்ஷன் திட்டத்தை மற்ற மாநிலங்கள் அறிவிக்க உள்ளன. அதன்படி பார்த்தால், தமிழ்நாடு தான் ஓய்வு ஊதிய திட்டத்துக்கு முன்னோடியாக இருக்கும். இது குறித்து கரிசனம் காட்டுவோர், பிரதமரிடம் நேரில் சென்று பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த கேட்க வேண்டும். அது முடியுமா என்பதுதான் கேள்வி. அதனால் தமிழகம் தான் ஓய்வு ஊதிய திட்டத்துக்கு முன்னோடி என்பதை மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button